2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மணல் வளத்தை பாதுகாக்குமாறு பேரணி

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணல் வளத்தைப் பாதுகாக்குமாறு கோரி, அப்பகுதிப் பொதுமக்களால், இன்று (21) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொண்டுகள்சேனை, பூலாக்காடு, கோராவெளி, வாகனேரி, முறுத்தானை உட்பட்ட பல பகுதிகளில், மண் அகழ்வில் ஈடுபடுபவதால், வயல் நிலங்கள், வீதிகள், ஆறுகள், பாலங்கள் என்பன அழிவடைந்து வருவதாக, பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.

பூலாக்காடு, கோராவெளி, முறுத்தானை கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேரணி, பொண்டுகள்சேனை - பூலாக்காடு வீதியில் ஆரம்பித்து, கிரான் பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

பிரதேச செயலக முன்பாக சென்ற பொதுமக்கள், கிரான் பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கான மகஜரொன்றை, பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுவிடம் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X