2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மண் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூலை 06 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

வெல்லாவெளி, இராணமடு பகுதியில் உள்ள ஆற்றில் மண் அகழ்வில்  ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 பேர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்று இவர்களை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

இதேவேளை வெல்லாவெளியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெல்லாவெளி ஊடாக களுவாஞ்சிக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டபோதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X