Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2020 ஜனவரி 08 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண் அகழ்வதில் விதிக்கப்பட்டுள்ள தடைச் சட்டத்தால் தங்களுக்கு அநீதி செய்யப்படுவதாக தெரிவித்து, வரையருக்கப்பட்ட ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர் சங்கத்தினர், ஓட்டமாவடி, காகிதநகர் பிரதேசத்தில் இன்று (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தால் மண் அகழ்வு நடவடிக்கைகள் மாவட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிரான் பிரதேச செயலக பிரிவில், குறிப்பிட்ட சிலர், மண் ஏற்றுவதாகவும் தங்களது அமைப்பினர்களுக்கு, பிரதேச செயலகத்தால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் தங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
“மண் அகழ்வில் தடை விதித்தால் அனைவருக்கும் அந்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குறித்த சிலருக்கு அது சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருக்கக்கூடாது” என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுனவிடம் வரையருக்கப்பட்ட ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago