Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, பேரின்பராஜா சபேஷ், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - முறக்கட்டடான்சேனை ஸ்ரீ விஷ்ணு கோவில், இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம் ஆகியனவற்றுக்கு அருகாமையில், நீண்ட காலமாக ஏற்பட்டுவரும் பாரிய மண்ணரிப்பைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜயம்பத், மாவட்ட அரசாங்க அதிபரைப் பணித்துள்ளார்.
ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி நிலையத்தின் இலங்கை கிளைத் தலைவர் மாரிமுத்து செல்லத்துரை, இந்த மண்ணரிப்புப் பாதிப்பு குறித்து, மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
குறித்த மண்ணரிப்புப் பாதிப்பால் இயற்கை வளம் கொண்ட மருதமர நீர் ஊற்றுக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் விஷ்ணு கோவில் கட்டடங்களும் முறக்கட்டான்சேனை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்படவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இப் பாடசாலையின் கல்வி கற்றலுக்கும் கோவில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும், மாரிமுத்து செல்லத்துரை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, ஆளுநரின் மேற்படி பணுப்புரைக்கு இணங்க, ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, இந்தப் பணிப்புரையை மாவட்டச் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
இந்த அறிவித்தலுக்கு அமைய, மாவட்டச் செயலக காணிப் பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன், முன்னுரிமை அடிப்படையில், குறித்த மண்ணரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கோரளைப்பற்று தெற்கு பிரதேச சபை செயலாளர் ஆர். ராஜ்பாபுவுக்கு அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago