2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘மண்முனை மத்தி’ எனும் புதிய தேர்தல் தொகுதியை ஏற்படுத்துமாறு முன்மொழிவு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 16 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் “மண்முனை மத்தி” எனும் புதிய தேர்தல் தொகுதியொன்றை ஏற்படுத்துமாறு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் முன்மொழிவொன்றை, மாகாண சபை எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது.

காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் மண்முனை வடக்கிலுள்ள 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் மண்முனை மேற்கிலுள்ள 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கியதாக 93,590 மக்கள் தொகையைக் கொண்டதாக, இந்த மண்முனை மத்தி எனும் புதிய தேர்தல் தொகுதியை ஏற்படுத்துமாறு, சம்மேளனம் தனது முன்னெமாழிவில் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தேர்தல் தொகுதிக்குள் தமிழ், முஸ்லிம் மக்கள் உள்ளடக்கப்படுவதாகவும் இன ஐக்கியம், சமூக நல்லுறவு என்பவற்றை கருத்தில்கொண்டு, இந்த முன் மொழிவை முன்வைத்துள்ளதாக, சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் கோளைப்பற்று மத்தி, மட்டக்களப்பு வடக்கு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு தெற்கு, பட்டிருப்பு மத்தி எனும் தொகுதிகளை ஏற்படுத்துமாறும் தமது பரிந்துறையில் கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X