Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 12 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மண்முனைப்பற்று பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) தோல்வியடைந்தது.
மண்முனைப்பற்று பிரதேச சபையின் அமர்வு, தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தலைமையில், ஆரையம்பதி நந்தபோன் மண்டபத்தில் இன்று (12) நடைபெற்றது.
இதன்போது, 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
பகிரங்கமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 14 உறுப்பினர்கள் நிதியறிக்கைக்கு எதிராக வாக்களித்ததுடன், தவிசாளர் உட்பட 3 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
மண்முனைப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாக ஒரு தலைப்பட்சமாக நிதியறிக்கையைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேசமொன்றை இலக்கு வைத்தே இந்த நிதியறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ், முஸ்லிம் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் நிதியறிக்கையை எதிர்ப்பதாக, சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இப்பிரதேச சபையின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான நிதியறிக்கைகளும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago