2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மண்முனையில் வெளியார் உள் நுழையத் தடை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குள் வெளி பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரிகள், அனுமதியின்றி உள்நுழைந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனைத் தொடர்ந்து, இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடுகளும் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்லுதல், முகக்கவசம் அணிதலைக் கட்டாயமாக்கிக் கொள்வதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு, பிரதேசத்தில் கிடைக்ககூடிய உள்ளூர் உணவுகளை  உட்கொணருமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .