Princiya Dixci / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“இலங்கை அரசே! சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளித்து, கட்டாய தகனத்தை நிறுத்துக” எனும் தொனிப்பொருளில் பதாதை காட்சிப்படுத்தலும் கவனயீர்ப்பும், மட்டக்களப்பு - காந்திப் பூங்காவிலும் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலைய வளாகத்திலும் நேற்று (16) முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
அங்கு கருத்துத் தெரிவித்த எழுத்தாளரும் பல்துறைக் கலைஞரும் சர்வமத அமைப்பின் செயற்பாட்டாளருமான ஏ.சி. அப்துல் றஹுமான், “இந்த நாட்டில் காலத்துக்குக் காலம் சிறுபான்மை இனங்கள் அச்சுறுத்தலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் மனித உரிமை மீறல்களுககும் உட்படுத்தப்பட்டே வந்துள்ளார்கள். அவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இப்பொழுது கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது ஆகும். இது அதி உச்ச மனித உரிமை மீறலாகவும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் மாபெரிய கொடுஞ்செயலாகவும் கருதப்படுகின்றது” என்றார்.
அயல் நாடுகளிடம் சடலங்களை அடக்கம் செய்யக் கேட்குமளவுக்கு அராஜகம் இந்த நாட்டில் தலைவிரித்தாடுகிறது எனவும் தெரிவித்த அவர், “நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்கள் சகல உரிமைகளுடனும் மத உரிமைகளை மதிக்கக் கூடிய வகையிலும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அமைதியும் அபிவிருத்தியும் இந்நாட்டில் நிலைத்து நிற்கும்” என்றார்.
இதில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் கே.முத்துலிங்கம், அந்நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் இந்திரன் ஜெயசீலி உட்பட இன்னும் பல ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago