2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

‘மத ஸ்தலங்கள் உடைக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மார்ச் 03 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சிறுபான்மையினரால் ஆதரவளிக்கப்பட்ட நல்லாட்சியின் நாயகரான மைத்திரியின் காலத்தில் சிறுபான்மை மத ஸ்தலங்கள் உடைக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என, ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போதய சூழலை கவனத்தில் கொண்டு, ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், சர்வமத தலைவர்கள் இணைந்தும நேற்று (02) மாலை நடத்திய ஊடக மாநாட்டில், இந்த அதிருப்தி வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கையளிப்பதற்கான மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ள விவரத்தையும் சம்மேளத் தலைவரும் தாழங்குடா கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமான எம்.எல். அப்துல்வாஜித் வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடும்போது, இந்த நாட்டில் சகலரும் சகவாழ்வு வாழ்வதற்கு ஒவ்வொரு பிரஜையினதும் மனித உரிமைகள், மத உரிமைகள், அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சட்டமும் ஒழுங்கும் இன மத மொழி பேதம் பார்க்காது சகலரும் ஒரே சமம் என்ற கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டும்.

குற்றவாளிகளின் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

உட்பட பல்வேறு கரிசனைக்குரிய விடயங்கள் அடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஏறாவூர் நகரம் மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து பௌத்த இஸ்லாமிய மதத் தலைவர்கள் கலந்துகொண்டு, இன ஐக்கியத்தைப் பற்றியும் சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தரப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X