Administrator / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
நாட்டில் சகல மதங்களுக்கிடையிலும் நல்லதொரு இணக்கப்பாடு ஏற்படுத்த வேண்டும். அதேவேளை,எதிர்காலத்தில் கலவரங்கள்,யுத்தங்கள் ஏற்படாத வகையிலான அத்திவாரங்கள் இடவேண்டும் என அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான சபைகளுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்.அது மகாநாடுகளிலோ கூட்டங்களிலோ மட்டும் நிற்ககூடாது.அது அடிமட்டத்துக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.
இந்த நாட்டில் புதிய அரசாங்கம் வந்துள்ளது.நல்லதொரு எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்துள்ளோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .