2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மத்தியஸ்த சபைகளின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மத்தியஸ்த சபைகளின் நடவடிக்கைகள், நேற்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் அனுமதியுடனும் ஆலோசனையுடனும் மத்தியஸ்த சபை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

மத்தியஸ்த சபைக்கு பிணக்குகளை தீர்த்துக்கொள்ள வருபவர்களும் மத்தியஸ்த உறுப்பினர்களும் கைகளைக் கழுவி, சுகாதார நடைமுறைகளைப் பேணி நடந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என, காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தலைவர் எம்.ஐ.எம்.உசனார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .