Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான்
குடும்பத்தகராறு காரணமாக தனது வீட்டைத் தானே எரித்ததாகச் சந்தேகிக்கப்படும் வீட்டு உரிமையாளரை சனிக்கிழமை (29) இரவு கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி, மீன்பிடி இலாகா வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 5 மாதங்களேயான தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இந்த அசம்பாவிதத்துக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து. மனைவி வீட்டுக்குள் இருந்த நிலையில், கணவன் வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்கு தீ வைத்த கணவன் கைதுசெய்ப்பட்டுள்ளதாகவும் இந்த வீடு 5 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டது எனவும் பொலிஸார் கூறினர்.
இதற்கு முன்னரும் தன்னை சமயலறையில் வைத்து சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்ய முயற்சி செய்ததாக, மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .