2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்

Freelancer   / 2024 பெப்ரவரி 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - செங்கலடி சுகாதார பிரிவின் கீழ் உள்ள உணவகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த 4 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில்  நேற்று வியாழக்கிழமை (22) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்து  தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் உத்தரவிட்டதுடன்  கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை அழிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

இதேவேளை இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் மேலும் கண்டுபிடிக்கப்பட்ட சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்து வந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் 26ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும்  செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பரமானந்தராசா தெரிவித்தார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .