Princiya Dixci / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், தாபரிப்புப் பணம் செலுத்த முடியாமல் சிறைக்குச் சென்று திரும்பிய நபரொருவர், தனது மனைவி மீது இரு கத்தியால் 13 கத்திக்குத்துகளை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், திங்கட்கிழமை (07) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து தப்பியோடிய கணவனை (வயது 40), நேற்று (08) மாலை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு, புளியடிதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி பெண், திருமணம் முடித்து இரு குழந்தைகளுக்குத் தாயான நிலையில் கணவன் - மனைவிக்கிடையே எற்பட்ட முரண்பாடு காரணமாக நீதிமன்றத்தை நாடிய நிலையில், கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதுடன், மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் கணவன் தாபரிப்பு பணம் செலுத்துமாறு நீதிமன்றம் கடட்ளையிட்டது.
இந்த நிலையில், மாதாந்த தாபரிப்பு பணம் செலுத்தாமல் இருந்து வந்த கணவனுக்கு, நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் வெளிவந்து மேற்படி சம்பவத்தைப் புரித்துள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
43 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago