2025 மே 07, புதன்கிழமை

மயிலவெட்டுவான் துறைக்கு புதிய வள்ளம் வழங்கி வைப்பு

Niroshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்
 
கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கத்திடம் மயிலவெட்டுவான் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, மயிலவெட்டுவான் ஆற்றைக் கடப்பதற்கு புதிய வள்ளம் நேற்ற செவ்வாய்க்கிழமை செங்கலடி பிரதேச சபையினால் மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாரி காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினால் மேற்படி பிரதேசம் பாதிப்படைவதாகவும் இதனால், மயிலவெட்டுவான் துறையினூடாக மக்கள் பயணிப்பதற்கு பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும்  மயிலவெட்டுவான் துறைக்கு ஆற்றுவழிப் பாதைக்கு ஏற்ற விதத்தில் வள்ளம் அமைப்பு ஒன்றினை பெற்றுத் தருமாறும் பிரதேசவாசிகளால் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அமைச்சர் மேற்கொண்ட முயற்சியால் உள்ளூராட்சி திணைக்களத்தின் உதவியில் செங்கலடி பிரதேச சபையினூடாக  மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு மேற்படி வள்ளம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.தங்கவேல், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரி.சித்திரவேல்மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X