Princiya Dixci / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.சரவணன், வ.சக்தி, க.விஜயரெத்தினம்
சாரணிய இயக்கத்தின் தலைவர் பேடன்பவலின் பிறந்த தினத்தையொட்டி, “தாய்ப்பூமியை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பில் மரநடுகை நிகழ்வு, இன்று (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட ரீதியான இந்த நிகழ்வு, அதன் மாவட்ட ஆணையாளர் வீ. பிரதீபன் தலைமையில், மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவில் பேடன் பவல் நினைவுச் சிலைக்கருகாமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் சாரணிய சங்க மாவட்டத் தலைவருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் கலந்துகொண்டு, உரையாற்றுகையில், “பேடன் பவல் என்ற உத்தமரால் உருவாக்கப்பட்ட சாரனியக் கொள்கை உடம்பில் ஓடிக்கொண்டிருந்தால், அவர் எந்தத் தேசத்தில், எந்த இனமாக, எந்த மதமாக இருந்தாலும் மனிதராக உத்தமராக இந்த உலகத்தில் வாழமுடியும் என்பதற்கு சாரணிய இயக்கம் சிறந்த உதாரணமாகும்” எனத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரும் சாரண சங்க்தின் மாவட்ட உபதலைவருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார், இராணுவ 23ஆவது படையணி அதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே, மாவட்ட உதவி சாரண ஆணையாளர் வே.ஆ.புட்கரன், இணைப்பாளர் ஜெயசீலன், பெண் சாரணிய அமைப்பின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி வீ. ரவிச்சந்தின் உள்ளிட்ட சாரணிய அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் மரம் நடும் செயற்பாடு, எதிர்வரும் 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026