2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மரக்குற்றிகள் கைப்பற்றல்: ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 28 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரிக் கிராமத்தில் திங்கட்கிழமை அதிகாலை சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மரக்குற்றிகளுடன், ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

அக்குரானை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இந்த மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஓட்டமாவடியிலுள்ள மர ஆலைக்கு கொண்டுவரப்படவிருந்த  நிலையிலேயே இம்மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
எட்டு அடி தொடக்கம் பனிரெண்டு அடிவரையான பத்து (10) மதுரை, தேக்கு மரக்குற்றிகளே கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X