Suganthini Ratnam / 2016 நவம்பர் 29 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மீன் கொண்டுசெல்லும் பாணியில் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்ட 17 தேக்குமரக் குற்றிகளை மட்டக்களப்பு, கிரான் -தொப்பிகலச் சந்தியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைப்பற்றியுள்ள பொலிஸார், மேற்படி லொறியின் சாரதியையும் நடத்துநரையும் கைதுசெய்துள்ளனர்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இந்த லொறியை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அதில் மரக்குற்றிகள் இருந்தமை தெரியவந்தது.
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சந்தணமடு ஆறுப்; பிரதேசத்தில் வெட்டப்பட்ட இம்மரக்குற்றிகள் ஓட்டமாவடிப் பிரதேசத்திலுள்ள மர ஆலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago