Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 30 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.ரிஸ்பின் தாய் சிசு போசாக்கு திட்டத்தின் கீழ் தாய்மார்களின் குருதிச் சோகை நோயை குறைப்பதற்காகவும் முகாமைத்துவம் செய்வதற்காகவும் திருக்கோவில் தங்க
வேலாயுதபுரம் கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் போசனை மிகுந்த பயிர் இனங்களை நடும் நிகழ்வு சனிக்கிழமை (28) இடம்பெற்றது.
கல்முனை சுகாதார பிராந்தியத்தில் தாய்மார்களின் குருதிச் சோகையின் அளவு 28 வீதமாக காணப்படுகின்றது அதேபோன்று பொத்துவில் மற்றும் இறக்காமல் பிரதேசங்களில் 40% காணப்படுகின்றது இதனை குறைத்து தாய்மார்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களின் கீழ் ஒரு பகுதியாக போசனைக் கன்றுகளை நடும் இத்திட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த நிகழ்வில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச வைத்திய வைத்திய அதிகாரி பொது சுகாதார உத்தியோகத்தர்கள் பொது சுகாதார மாதுக்கள் மற்றும் ஏனைய கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள். குறித்த திட்டத்திற்கு அம்பாறை மாவட்ட செயலகம்,
திருக்கோவில் பிரதேச செயலகம், விவசாயத் திணைக்களம், Assets Based Community Development organization என்பன ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago