2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“மரம் தனித்து நிற்கும்”

Freelancer   / 2023 ஜனவரி 17 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி. அன்சார்

முஸ்லிம்களின் எதிர்காலத்ததையும், இருப்பையும் தீர்மானிப்பதற்கான அரசியல் முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனேகமான மாவட்டங்களில் தனித்து
மரச்சின்னத்தில் களமிறங்கவுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை மத்தியகுழு உறுப்பினர்களுன் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதி மண்டபவத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்ற வேண்டும்.

முஸ்லிம்களின் ஒரே குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதனை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் உரத்துக் கூற வேண்டும். அனைத்து பேதங்களையும் மறந்து இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை பலப்படுத்த வேண்டும் என்றார்.

இந்தத் தேர்தலிலே முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற சவால்கள், சதிகள், ஆபத்துக்களை சரிவர விளங்கிக் கொள்ளாமல் எவரும் பிழையான தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். அதற்கு சிறந்த நபர்களை வேட்பாளர்களாக களமிறக்கவுள்ளோம் என்றார்.

எனவே, இத்தேர்தலில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கு அப்பால் சம்மாந்துறை மக்கள் ஐக்கியத்தைக் கடைபிடித்து பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கிய நமது தேசிய விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .