2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மற்றுமொரு கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

Freelancer   / 2023 நவம்பர் 30 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த கைதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் பீற்றர் போல் நேற்று (29) உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நீதிமன்ற  வழக்கு ஒன்றில் ஆஜராகாத நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் அவரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் சிறைச்சாலையில்  செவ்வாய்க்கிழமை (28) மயங்கி வீழ்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடமான சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29)  சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .