2025 மே 07, புதன்கிழமை

மலசலகூட குழியில் விழுந்து சிறுமி பலி

Thipaan   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 6ஆம் குறிச்சியில்,  மலசலகூடம் கட்ட வெட்டப்பட்ட குழியில் விழுந்து சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று  வெள்ளிக்கிழமை (30) மாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி பாவா வீதியிலுள்ள ரமீஸ் பாத்திமா ரஜா எனும் 4 நான்கு வயது சிறுமியே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த சிறுமி, மாலை 4மணியளவில் தனது வீட்டுக்கருகிலுள்ள பெரியம்மாவின் வீட்டில் வீடு கட்டுவதற்காக போடபட்ட அத்திபாரத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த அத்திபாரத்தினுள் மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியினுள் விழுந்துள்ளார்.

சிறுமியை காணவில்லை என பெற்றாரும் அவரது உறவினர்களும் தேடிய நிலையில் இந்த சிறுமி மாலை 6.30 மணியளவில் மலசல கூடம் நிர்மானிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு உயரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X