2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மழையினால் போக்குவரத்து பாதிப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி மணல் வீதி, இன்று ஞாயிற்றுக்கிழமை (25) பெய்த அடைமழை காரணமாக  நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். 

களுவாஞ்சிக்குடி பிரதான வீதிக்கு அடுத்ததாக காணப்படும் குறித்த வீதி, நீண்ட காலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. மழையினால் வெள்ளத்தில் மூழ்குவது வருடாந்தம் வழமையாகியுள்ளது. மிகக் கூடுதலாக மக்களும் வாகனமும் பிரயாணம் செய்யும் இவ்வீதியானது திருத்தப்படாமல் காணப்படுவதனையிட்டு கவலையடைவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 
 
மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினத்திடம் இவ்வீதியின் நிலமை தொடர்பில் கேட்டபோது, 
 
இவ்வீதியானது வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு சொந்தமானது. களுவாஞ்சிக்குடியைப் பொறுத்தளவில் இது மிகவும் முக்கியமான வீதி என்பதனால் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு பல தடவைகள் நான் அறிவித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X