2025 மே 07, புதன்கிழமை

மழையால் மட்டு., திருமலையில் 205 குடும்பங்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 15 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ,எஸ்.எம.யாசீம், ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், வடிவேல் சக்திவேல்  

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவந்த  நிலையில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 205 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் இதுவரையில் இடம்பெயர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 165 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேர் இதுவரையில் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்;த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இந்நிலையில், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவுக் கிராமத்தில் 146 குடும்பங்களைச் சேர்;ந்த 478 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் கட்டுமுறிவுப் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் தெற்குக் கிராமத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேரும் காங்கேயனோடை தெற்குக் கிராமத்தில் 04 குடும்பங்களைச் சேர்;ந்த 15 பேரும் இடம்பெயர்;ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்தது.

பாடசாலைகளில் தங்கியுள்ளவர்;களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின்  பணிப்புரைக்கமைய சமைத்த உணவு வழங்கப்படுவதாக  மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்; எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடிக் கிராமத்தில்; 40 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், இவர்கள் அங்குள்ள பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

மேலும், இம்மாவட்டத்தில் 1,506 குடும்பங்களைச் சேர்ந்த 5,946 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 640 குடும்பங்களைச் சேர்ந்த 2,457 பேரும் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில்; 852 குடும்பங்களைச் சேர்ந்த 3,443 உறுப்பினர்களும் பட்டணமும்சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும் மழையால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் குச்சவெளி, கிண்ணியா, பட்டணமும்சூழலும் ஆகிய கிராமங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால்,
பெக்கோ இயந்திரங்களின் உதவியுடன் வடிகான்களை வெட்டி நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பிரதேச செயலாளர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கூட்டத்தில் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் கிரான் ஊடான புலிபாய்ந்த கல் பிரதேசத்துக்குச் செல்லும் பாதை தடைப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு சனிக்கிழமை (14) மாலையிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் படகுச்சேவை நடத்தப்படுகின்றது.

மேலும், வெலிக்காகண்டி மற்றும் மாவடி முன்மாதிரிக் கிராமங்களுக்குச் செல்லும் பாதையும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் இங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. மாவடியோடைப்பாலத்தை அண்மித்துள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறும மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (14) காலை 8.30 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிவரை 54 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக  மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக்குளத்தின் 03 வான்கதவுகள் 05 அடிக்கும் உறுகாமம் குளத்தின் 02 வான்கதவுகள் 08 அடிக்கும் திறந்துவிடப்பட்டுள்ளதாக உறுகாமம் நீர்ப்பாசனப் பிரிவு பொறியியலாளர் க.அகிலன் தெரிவித்தார்.
 
மேலும், வேளாண்மைச் செய்கை பண்ணப்பட்டுள்ள தாழ்நில வயல்வெளிகுளம் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில்  தேங்கியுள்ள வெள்ளநீரை வடிந்தோடி ஆறு மற்றும் கடலைச் சென்றடைவதற்கு  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X