2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இடமாற்றம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 05 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ் 

கிழக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு இளைஞர் விவகார முன்பள்ளி அமைச்சின் செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டா, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக முத்துபண்டா 2 வருடங்கள் 8 மாதங்கள் சேவையாற்றியிருக்கிறார்.

அவருக்கான பிரியாவிடை, திருகோணமலையிலுள்ள மாகாண கல்வியமைச்சில் நேற்று (04) நடைபெற்றது.

மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் தா.சித்திரவேல், கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் ச.நவநீதன் உள்ளிட்ட உயரதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரியாவிடைபெறும் செயலாளர் முத்துபண்டாவின் சேவை குறித்து பலரும் உரையாற்றியதுடன், நினைவுப் பரிசுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X