2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாட்டு வண்டியில் வயலுக்கு சென்று அருவி வெட்டி பொங்கல் விழா

Freelancer   / 2023 ஜனவரி 30 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையிலும் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மாவட்ட பொங்கல் விழா   சம்பூர் அருள்மிகு பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம தலைமையில் சனிக்கிழமை (28) நடைபெற்றது.

பாரம்பரிய அம்சங்களை வெளிக்கொணரும் வகையில் இப்பொங்கல் விழா நிகழ்வுகள் மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் மாட்டு வண்டியில் வயலுக்கு சென்று அருவி வெட்டியதுடன்,  உழவுத் தொழிலின்  உன்னத தன்மையை இச்சம்பவம் பறைசாற்றுவதாக அமைய
பெற்றிருந்தது.

பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் பரிசில்களை வழங்கி வைத்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .