2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாணவிகளின் வீட்டுக்குள் குதித்த சிறுவன் சிக்கினார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 01 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் கூரையைப் பிரித்து உள்ளிறங்கித் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரான 13 வயதுச் சிறுவன், செவ்வாய்க்கிழமை இரவு (31) கைதுசெய்யப்பட்டுள்ளான் என, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கொம்மாதுறை உமாமில் வீதியை அண்டிய பகுதிலுள்ள, கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த வீடொன்றிலேயே, இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளில் சிலர், அங்கு வீடொன்றை வாடகைக்குப் பெற்றுத் தங்கியிருந்து கல்வி பயின்று வந்துள்ளனர்.

அதேநேரம், அந்த மாணவிகள் தங்கியுள்ள வீட்டுச் சுற்றாடலில் வசிக்கும் குறித்த சந்தேகநபரான சிறுவன், அந்த மாணவிகள் வீட்டில் இல்லாத தருணம் பார்த்து வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளிறங்கி, மாணவிகளின் உடமைகளான லப்டொப், பென்ட்ரைவ், நவீன ரக அலைபேசிகள், தங்க நகைகள், பணம் என்பனவற்றைத் திருடிச் சென்றுள்ளான்.

இச்சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், சந்தேக நபரான சிறுவனைக் கைதுசெய்ததோடு, சிறுவன் அளித்த தகவலின் பேரில் திருடப்பட்ட 1 லப்டொப், 3 அலைபேசிகள், பணம், பென்ட்ரைவ் உட்பட இன்னும் சில பொருட்களையும் கொம்மாதுறைப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வரும் ஏறாவூர் பொலிஸார், சந்தேகநபரான சிறுவனை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X