Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா. கிகே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, மாநகர முதல்வரின் மாநகர ஒளியாக்கல் திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடு இன்று(17) கல்லடி பாலத்தில் இடம்பெற்றது. கல்லடி பாலத்தில் ஒளிரா நிலையில் இருக்கின்ற வீதி மின்குமிழ்களை ஒளிரச் செய்யும் வேலைப்பாடு மட்டக்களப்பு மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்செயற்பாட்டினை, பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அவ்விடம் விஜயம் செய்து மேற்படி வேலைப்பாட்டினைப் பார்வையிட்டனர்.
பல காலமாக ஒளிர்ந்தும், ஒளிரா நிலையில் இருந்த இக் கல்லடிப்பால வீதி மின்குமிழ்களால் மக்களின் போக்குவரத்து மிகவும் பாதிப்புற்றிருந்தது.
இதன் பிரகாரம், மாநகர சபை பொறுப்பேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர எல்லைக்குள் இருக்கும் வீதி மின்குமிழ்கள் அனைத்தையும் ஒளிரச் செய்து, மாநகரத்தை ஒளிமயமாக மாற்ற வேண்டும் என்ற முதல்வரின் எண்ணக்கருவின் முதற்கட்டமாக மேற்படி வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago