2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மாயமான வர்த்தகர் சடலமாக மீட்பு

Editorial   / 2018 மார்ச் 11 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில்  சனிக்கிழமை இரவு காணாமல்போன வர்த்தகர்,  இன்று (11) மாலை மட்டக்களப்பு - கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகரான, காத்தான்குடி நகர், மீன்பிடி இலாகா வீதி, மனேஜர் ஒழுங்கையைச் சேர்ந்த ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது 35) என்ற வர்த்தகரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர், நேற்று  (10) இரவு, மஞ்சந்தொடுவாயிலுள்ள தனது தொழிற்சாலையிலிருந்து வெளியேறி, அருகிலிருந்த உணவகத்தில் தேனீர் அருந்தி விட்டு வெளியேறும்போதே, இரவு 7.30 மணியளவில் காணாமல் போயுள்ளார். 

அவர் கடைசியாக அந்த உணவகத்திலிருந்து வெளியேறியபோது பதிவான சி.சி.டி.வி காணொளியை வைத்து, விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார்,  கல்லடிப் பகுதி வாவியிலிருந்து, குறித்த வர்தத்கரை சடலமாக மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X