2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மாறு வேடத்தில் பெண்ணை மணம் புரிந்த பெண் சிக்கினார்

Editorial   / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பகுதியில், ஆண் வேடமணிந்து, 23 வயது பெண்ணைத் திருமணம் செய்த 24 வயதுப் பெண் ஒருவரை மூதூர் பொலிஸார் அண்மையில் (26) கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இச்சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த திருகோணமலையைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணையும், வவுனியா பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரையும் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், குறித்த பெண், தான் ஆண் எனக் காட்டி, அவரைக் காதலித்து அப்பெண்ணின் குடும்பத்தின் அனுமதியுடன், கடந்த வியாழக்கிழமை (25) திருகோணமலையில் பதிவுத் திருமணம் செய்துள்ளார்.

பதிவுத் திருமணத்தின்போது, வேறோர் ஆணின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியுள்ளார்.

திருமணத்தின் பின்னர் அப்பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்ட திருமணம் செய்த பெண், தனது உறவினர்கள் உதவியுடன், சந்தேகநபரைச் சோதனைக்குட்படுத்திய போது அவர், பெண் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X