2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாறுவேடமிட்டு வாழ்ந்தவர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறுபட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டிருந்ததோடு, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி, மாறுவேட‪மிட்டு வாழ்ந்த 33 வயதுடைய நபரொருவர், நேற்று (12) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், மாவடிவெம்பு கிராமத்தை சொந்த இடமாகக் கொண்ட குறித்த நபர், ஏறாவூர், நிந்தவூர், வவுனியா, கிளிநொச்சி என தனது வசிப்பிடங்களை மாற்றிக் கொண்டு, ஒவ்வொரு ஊர்களிலும் வெவ்வேறு பெயர்களிலும் போலி முகவரிகளிலும் நடமாடித் திரிந்த வேளையில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மாவடிவெம்புக் கிராமத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கெதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இரண்டு பகிரங்கப் பிடியாணைகளும், 2 சாதாரண பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்களினாலும் குறித்த நபருக்கெதிரான வழக்குகள் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X