Editorial / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

துஷாரா
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் இனங்காணப்பட்ட மாற்றத்திறனாளிகள் மற்றும் வறுமைக்குட்பட்ட நபர்களுக்கான கலாசார நிகழ்வும், மண்முனைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்றது.
இந்நிகழ்வு, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினையொட்டி, “மாற்றத்தை நோக்கிய மாற்றுத்திறனாளிகள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்தக் கலாசார நிகழ்வில், சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றினர் என்பதுடன், அங்கு இடம்பெற்ற பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.
இதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்கையை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் நோக்கிலும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் முன்நேற்றத்தை ஏற்படுத்துவதற்கான உந்துதல் மேற்கொள்ளப்பட்டது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று, பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. லக்ஸ்வர்னியா பிரசந்தன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு 'CAMID' நிறுவன திட்ட முகாமையாளர் க.காண்டீபன், மண்முனைப்பற்று பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் அ. சபேசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ச.அமிர்தநாயகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago