Janu / 2024 ஜூன் 02 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடத்தில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
களுவதாளைக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய திவாகரன் ஹபிசாயன் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார் .
குறித்த இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கிரான்குளம் பகுதியிலிருந்து களுதாவளை நோக்கி மிகவும் வேகமாக சென்ற போது ,மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் வளைவு பகுதியில் வைத்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது .
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வ.சக்தி


22 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
4 hours ago