2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மின்சார விஸ்தரிப்பு அபிவிருத்தி வேலைகளுக்காக மின்துண்டிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர், மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் பிரதி வியாழன்​ தோறும் மின்துண்டிப்பு காலவரையறையின்றித் தொடருமென செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய மின் அத்தியட்சகர் சி.சுவேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மின்சார விஸ்தரிப்பு அபிவிருத்தி வேலைகளுக்காக பிரதி வியாழன் தோறும் காலை முதல் மாலை வரை இடம்பெறும் மின்துண்டிப்பு,  நாளைமறுநாள் (05) ஏறாவூர் நகர சபை நிருவாகத்திற்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இடம்பெறவிருப்பதால், வழமையான வியாழக்கிழமை மின்துண்டிப்பு இந்தவாரம் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏறாவூர் செங்கலடி மின்பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி  ஏற்படும் மின்தடையால் அனைவரும் அன்றாட அலுவல்களில் அதிக சிரமத்தை எதிர்நோக்குவதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் இருந்து அடுத்துவரும் ஒரு மாத காலத்திற்கு பகல் முழுவதும் புனித றமழான் நோன்பை முஸ்லிம்கள் அனுஷ்டிக்கவுள்ளனர், இவ்வேளையில் வழமையான மின்துண்டிப்பு இருக்குமாயின் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X