Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
காட்டில் வேட்டையாடப்பட்ட ஒரு தொகுதி மிருக இறைச்சிகளை டிப்பர் வாகனத்தில் ஏற்றிச்சென்ற இருவரை, இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியிலுள்ள காட்டிலிருந்து மஹியங்கனை பிரதேசத்துக்குப் பயணித்த மேற்படி டிப்பர் வாகனம், கோப்பாவெளி பகுதியில் வைத்து பொலிஸாரால் சோதனையிட்டதையடுத்து, அவ்வாகனத்தில் 20 கிலோகிராம் மரை இறைச்சியும் 12 கிலோகராம் பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டதாக, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸாரால் நேற்று (15) குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் மஹியங்கனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
டிப்பர் வாகனம், இறைச்சிப் பொதிகளுடன் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரகோன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
59 minute ago
1 hours ago