Janu / 2024 ஜூன் 10 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு எறாவூரில் சிறிய மரப்பெட்டி ஒன்றில் 3 ஆடுகளை அடைத்து வைத்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்ற ஒருவர் மிருகவதை குற்றச்சாட்டில் திங்கட்கிழமை(10) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
செங்கலடியில் இறைச்சிக்காக 3 ஆடுகளை வாங்கி அதனை மரப்பெட்டி ஒன்றில் கட்டி அடைத்துக்கொண்டு மோட்டர் சைக்கிள் ஒன்றில் ஏறாவூருக்கு எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது 55 வயதுடைய ஏறாவூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்துள்ளதுடன் , 3 ஆடுகள் மற்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர் .
கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கனகராசா சரவணன்

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025