Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), நாளைய (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியைப் பெற்று, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இன்று(21) கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தடுப்புக் காவலில் இருந்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக இரண்டாவது தடவையாக அனுமதியை பெற்று சென்றுள்ள இவர், வெள்ளிக்கிழமை (25) வரை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படுவார் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக, பிள்ளையான் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நடந்து முடிந்த பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
9 minute ago
16 minute ago
41 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
41 minute ago
44 minute ago