Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 03 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபையின் நிதியறிக்கை சமர்ப்பிப்பு விவகாரம் தொடர்ந்தும் குழப்பகரமான நிலையில் இருந்து வருவதால், உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடமிருந்து நகர சபைச் செயலாளருக்கு புதிய உத்தரவு வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் 2021 இவ்வாண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவுகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாவுல் ஹக் தெரிவித்தார்.
இது தவிர, எந்த விதமான மூலதனச் செலவுகளையும் மேற்கொள்ளாதிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மீண்டெழும் செலவுகள் எனக் கருதுமிடத்து நாளாந்த பராமரிப்பு வேலைகள் ஊழியர்களின் சம்பளம் மின்சாரக்; கொடுப்பனவுகள். அலுவலக சிறிய பராமரிப்பு வசதிகள், வாகனங்களின் சிறிய பராமரிப்புக்கள் உள்ளிட்டவை அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் பாரிய செலவுகளைக் கொண்டதான வாகனங்களுக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுதல் கட்டிடங்கள் நிர்மாணித்தல் உள்ளிட்ட மூலதனச் செலவுகளை உள்ளடக்கிய விடயங்கள் நகர சபையால் செயற்படுத்த முடியாதென தெரிய வருகின்றது.
ஏறாவூர் நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை, நகர சபைத் தலைவரால் இரு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் சபை அமர்வுகள் கூச்சல் குழப்பத்தில் முடிவடைந்தன.
இனி இவ்விடயத்தில் மாகாண ஆளுநரே முடிவெடுக்கும் தரப்பாக மாறியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago