Editorial / 2021 நவம்பர் 24 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் நேற்று (23) இரவு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர், படகு கவிழ்ந்ததில் கடலில் வீழந்து காணாமல் போயுள்ளார்.
எனினும், செட்டிபாளையம் கடற்கரையில் படகு மாத்திரம் இன்று (24) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, திரைய்மடு, சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மீனவர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ததையடுத்து, அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரை, கடற்படையினர் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.
7 minute ago
7 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 hours ago
04 Feb 2026