Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 மே 27 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
பொத்துவில் பிரதேசத்தில் இயந்திர படகில் மீன்பிடிக்க புதன்கிழமை அதிகாலை சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பில் அவர்களது உறவினர்கள் நேற்று பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
போத்துவில், பாக்கியவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமட் நௌவ்பர் மற்றும் 40 வயதுடைய முகமது தாஹீர் என்ற இருவரும் புதன்கிழமை அதிகாலை வீட்டில் இருந்து மீன்பிடிப்பதற்காக பொத்துவில் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து இயந்திர படகில் மீன்பிடிக்க கடலுக்குச்சென்றவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை.
இதனையடுத்து கடற்படையினரின் உதவியுடன் பொலிஸார் இவர்களை தேடும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago