2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீராவோடை உப தபாலகத்தை தரமுயர்த்துமாறு வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1953.04.16ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட அமைந்துள்ள மீராவோடை உப தபாலகத்தைத் தரமுயர்த்துமாறு, பிரதேச மக்களாளும் அமைப்புகளாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தபாலகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 65 ஆண்டுகளுக்கு கடந்துள்ள நிலையிலும் இன்றுவரை அது தரமுயர்த்தப்படாத நிலையில் உப தபாலகமாகவே இயங்கி வருகின்றது.

மேலும், இந்த உப தபாலகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதற்கானதொரு நிரந்தர கட்டடம் இல்லாத நிலையில் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வந்தது.

பின்னர், மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியில் ஒரு சிறு பகுதியைப் பெற்று, உப தபாலகத்துக்கான நிரந்தரக் கட்டடமொன்றை அமைப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக பள்ளிவாசல் காணியிலிருந்து ஒரு துண்டுக் காணியை உப தபாலக கட்டடம் அமையப்பெறுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X