2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மீள் குடியேற்ற மக்களுக்கு தற்காலிக குடியிருப்புகள்

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தவபாலன்

புளுட்டுமான் ஓடை, மீள் குடியேற்ற வாசிகளுக்கு தற்காலிக குடியிருப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனதென, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்¸ 

“கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை  புளுட்டுமான் ஓடை மீள் குடியேற்றவாசிகள் சந்தித்து¸ தங்களை தங்களது முன்னைய இடத்தில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை விரைவாக செயற்படுத்துமாறு என்னைப் பணித்திருந்தார்.

“மீள்குடியேற்றத்தின் முதற்கட்ட செயற்பாடு தற்காலிகக் கொட்டகைகளை வழங்குதலாகும். அதற்கான நடவடிக்கைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அவைகளை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். அடுத்த கட்டமாக அவர்களுக்கான நிரந்தர வீடுகள் வழங்கப்படும்.

“அத்தோடு, அவர்களது குடியிருப்புகளுக்கு பயணிப்பதற்கான பிரதான பாதை தொடக்கம் குறுக்கு வீதிகள் வரை புனர்நிர்மாணம் செய்யப்படும்” எனவும் அவர்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X