எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஜனவரி 30 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளரின் வீட்டை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் ஒன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில், நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நால்வர் காயமடைந்து நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பன்சாலை 2ஆம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள ஜ.றிஸ்வான் என்பவரின் வீடே, இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததன் காரணத்தினாலேயே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வருகை தந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராக்கள், தொலைக்காட்சி, பிளேயர், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட இவரது உறவினர்களின் முச்சக்கரவண்டி, எல்ப்ரக படி வாகனம் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்த நகைகள், ஒரு இலட்சம் ரூபாய் பணம், வீட்டின் உரிமையாளர் வடை வியாபாரம் செய்யும் அனுமதிப் பத்திரம் என்வற்றையும் தாக்குதல் நடத்தியோர் கொண்டுச் சென்றுள்ளனர்.
அத்துடன், வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, மச்சாள், மருமகன் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .