2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘முகாமைத்துவ உதவியாளர்கள் போராட்டத்துக்கு தயாராகின்றனர்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கத்தினர், முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரி, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனரென, அத்தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜி. முபாறக் தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதியன்று, மட்டக்களப்பு - காந்தி பூங்கா முன்பாகவும், 21ஆம் திகதியன்று, அம்பாறை மாவட்ட செயலகம் முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பளத் திட்டத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கல், பரீட்சை முறையிலான பதவி உயர்வுகள், “முகாமைத்துவ உதவியாளர் சேவை” என்பதை “முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை” எனப் பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளே, இதில் முன்வைக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

அதி சிறப்புத் தர முகாமைத்துவ உதவியாளர்களையும், முகாமைத்துவ உதவியாளர்களையும், பிரதிநிதித்துவப்படுத்தும் 10க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து, அ​ரசாங்கத்துக்கு அலுத்தம் கொடுக்கும் முகமாக, இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளவுள்ளதாகவும், அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .