Princiya Dixci / 2021 ஜனவரி 06 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஜவ்பர்கான், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியஉப்போடை பகுதியில், மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல்போனவர் நேற்று (05) பிற்பகல் 2 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்ற புன்னைச்சோலையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் மரியதாஸ் (48 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மீன்பிடிக்கச் சென்றபோது வாவியில் முதலையால் இழுத்துச்செல்லப்பட்டு, சின்ன உப்போடையில் உள்ள களப்பு ஒன்றுக்குள் இருந்து அப்பகுதி மீனவர்களால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலகமாக மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், மீன்பிடித் தொழிலுக்கு தாம் அச்சப்பட்டு செல்வதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago