Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ஜவ்பர்கான், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பகுதி முந்திரித்தோட்டம் ஒன்றில் மரத்தின்கீழ் பாதுகாப்பாக பொலித்தீன் பையொன்றில் சுற்றிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை, நேற்று (29) மாலை மீட்டுள்ளதாக, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரா தெரிவித்தார்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மட்டக்களப்பு விசேட புலனாய்வுப் பிரிவுப் பொறுபதிகாரி, மற்றும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்படி முந்திரித் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சக்திவாய்ந்த ரி 81 ரக துப்பாக்கி, 2 மகசீன், 49 ரவைகள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த முந்திரித் தோட்ட உரிமையாளரான ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago