Editorial / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாகரைப் பொலிஸ் பிரிவு கதிரவெளியில் நேற்று முன்தினம் (26) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வு பெற்ற கிராம சேவகர் ஒருவர் பலியாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
கதிரவெளி – புச்சாக்கேணி எல்லைக்குச் சமீபமாக பால்பண்ணைக்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில், கதிரவெளியை வசிப்பிடமாகக் கொண்ட குழந்தைவேல் சிங்காரவேல் (வயது 68) எனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கன்ரெர் ரக வாகன சாரதியைக் கைதுசெய்து விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
கதிரவெளியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டுத் திங்கட்கிழமை இரவு 7.50 மணியளவில் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
அந்நேரம், வாகரைப் பக்கமிருந்து கதிரவெளிப் பக்கம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த கன்ரெர் ரக வாகனம், முன்னாள் கிராம சேவகர் மீது மோதியதில், அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
விபத்து இடம்பெற்று முன்னாள் கிராம சேவகர் பலியானதை அறிந்த கிராம மக்கள், சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளாகிக் கிடந்த கன்ரெர் வாகனத்துக்குத் தீவைத்துள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago