2025 மே 09, வெள்ளிக்கிழமை

முன்னாள் முதலமைச்சர்கள் சந்திப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), முன்னாள் வட, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள், நேற்று (09) மட்டக்களப்பு சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் குகன்  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் கட்சிகள் சேர்ந்து எவ்வாறு அரசியலை முன்னெடுப்பது தொடர்பாக, இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X