Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
நடராஜன் ஹரன் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அறநெறிக் கல்வி இறுதியாண்டு பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்களுக்கான முன்னோடிக்கருத்தரங்கு, நேற்று (16) காலை 8.30 மணிக்கு நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் ஓய்வுபெற்ற அதிபர், சைவப்புலவர் இ.கோபாலபிள்ளை, இந்துசமய வரலாறு எனும் தலைப்பிலும், கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறை உதவி விரிவுரையாளர் ஜெ.பால்ராஜ், சமூகவாழ்வியல் எனும் தலைப்பிலும், கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறை உதவி விரிவுரையாளர் அ.பவித்திரா, இந்துசமய இலக்கியங்கள் எனும் தலைப்பிலும், திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் து.சிவதர்ஷினி இந்துசமய மெய்யியல் எனும் தலைப்பிலும் விரிவுரைகளை ஆற்றினர்.
இக்கருத்தரங்கில் 18 அறநெறி பாடசாலைகளைச் சேர்ந்த 81 பரீட்சார்த்திகளும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .