ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் முன்யோசனையின்றி முட்டுக் கொடுக்க முடியாதென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் யாரை ஆதரிப்பது என்ற கேள்விகள் எழுந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் விழிப்படைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயம் தொடர்பாக அவர்இன்று (01) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விழிப்புக்குப் பின்னரான காலகட்டத்திலும் பல்வேறு அரசியல் அழுத்தங்களால் நிபந்தனையற்ற ஆதரவை முஸ்லிம்கள் வழங்கியதன் பேரில் பல பின் விளைவுகளையும் பாதிப்புகளையும் சந்தித்த வரலாறுகள் நிறைய உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த கால முஸ்லிம் அரசியலில் விடப்பட்ட வரலாற்றுத் தவறுகள் இனிமேலும் இடம்பெறக் கூடாதெனவும் அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒருபோதும் வாய்ப்பளித்துவிடக் கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .